ஐபிஎல் 2022: வீரர்களின் பேட்டிங் வரிசை குறித்த ட்விட்; ஜடேஜாவின் பதிலடி!

Updated: Sun, Jan 30 2022 13:42 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 15ஆவாது சீசனுக்கான ஏலம் பெங்களூருவில் நடைபெறுகிறது. 2 நாள் நடைபெறும் இந்த மெகா ஏலத்தை ஸ்டார் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் விதமாக சென்னை அணி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒரு ட்விட் போட, அதற்கு ஜடேஜா தக்க பதிலடி தந்துள்ளார்.

ஐபிஎல் அணிகள் எந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று ஒரு பட்டியலை தயார் செய்து வருகின்றன. ரசிகர்களும் எந்த விரர்களை தங்களது அணி எடுக்க வேண்டும் என்று ட்விட்டரில் தேர்வு செய்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை அணி எந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ரசிகர்கள் தேர்ந்து எடுங்கள் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒரு ட்விட் போட்டுள்ளது

அதில் சென்னை அணி தக்க வைத்துள்ள வீரர்களை பேட்டிங் வரிசையில் போட்டு மற்றவர்களை தேர்ந்து எடுங்கள் என்று அதில் தெரிவித்திருந்தது. இதில் ருத்துராஜ்க்கு பேட்டிங் வரிசையில் முதல் இடமும், மொயின் அலிக்கு 3ஆவது இடமும், தோனிக்கு 7ஆவது இடமும், ஜடேஜாவுக்கு 8ஆவது இடமும் என வரிசைப்படுத்தப்பட்டிருந்தது.

இதனால் கடுப்பான ஜடேஜா, என்னை ஏன் இவ்வளவு சீக்கிரமாக 8ஆவது வரிசையில் இறக்கிவிடுகிறீர்கள், எனக்கு பேட்டிங் வரிசையில் 11ஆவது இடத்தை தாருங்கள் என்று நகைச்சுவை கலந்து கூறினார். இதன் மூலம் , நடப்பு ஐபிஎல் தொடரில் முன்வரிசையில் இறங்க போகிறேன் என்று மறைமுகமாக கூறியுள்ளார்.

 

பேட்டிங்கில் கீழே இறங்குவதால், தம்மால் முழு திறனையும் காட்ட முடியவில்லை என்று ஜடேஜா புலம்பி கொண்டிருந்த நிலையில், அவருக்கு தோனி பேட்டிங் வரிசையில் புரோமோஷன் வழங்கியுள்ளது தெரிகிறது. இதே போல் இந்திய அணியிலும் எனக்கு புரோமோஷன் வேண்டும் என்பதை ஜடேஜா ஒரே ட்விட் மூலம் மறைமுகமாக கூறிவிட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை