ஆசிய கோப்பை 2022: பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன்!
பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றி சொதப்பினாலும், சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை வீழ்த்தி அசத்தலான கம்பேக்கை கொடுத்தது. அதிலும் முகமது ரிஸ்வானின் ஆட்டம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
அதேசமயம் முகமது ரிஸ்வான் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இப்போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகமும் உள்ளது. மேலும் பந்துவீச்சில் அந்த அணி ஹசன் அலிக்கு இப்போட்டியிலாவது வாய்ப்பு வழங்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மறுபக்கம் முகமது நபி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டாலும், இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் தோல்வியைத் தழுவியது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும் அந்த அணியில் குர்பாஸ், ஸத்ரான், ஸஸாய் ஆகியோர் உச்சகட்ட ஃபார்மில் உள்ளனர். அதேசமயம் பந்துவீச்சில் முஜீப் உர் ரஹ்மான், ரஷித் கான், ஃபரூக்கி ஆகியோரும் இருப்பது அணிக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் – பாபர் ஆசாம் (கே), முகமது ரிஸ்வான் , ஃபகார் ஸமான், முகமது நவாஸ், குஷ்தில் ஷா, ஆசிப் அலி, இஃப்திகார் அகமது, ஷதாப் கான், ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, முகமது ஹஸ்னைன்
ஆஃப்கானிஸ்தான் - ஹஸ்ரதுல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி (கே), ரஷித் கான், கரீம் ஜனத், சமியுல்லா ஷின்வாரி, நவீன்-உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.