நியூசிலாந்து vs பாகிஸ்தான், அரையிறுதிச் சுற்று - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Nov 08 2022 15:22 IST
Pakistan vs New Zealand, T20 World Cup, Semifinal 1- Cricket Match Prediction, Where To Watch, Proba (Image Source: Google)

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. குரூப் 1லிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், குரூப் 2லிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

இதற்கிடையில், அரையிறுதிப்போட்டியில் குரூப் இரண்டிலிருக்கும் பாகிஸ்தான் அணி, குருப் ஒன்றில் உள்ள நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையான இப்போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. 

இந்த உலக கோப்பையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான வலுவான நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் இந்தியா - ஜிம்பாப்வேவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்கா நெதர்லாந்திடம் அடைந்த அதிர்ச்சி தோல்வியின் காரணமாக கடைசி நேரத்தில் அரையிறுதிக்கு முன்னேறியது.

நியூசிலாந்து அணி வலுவான மற்றும் நல்ல பேலன்ஸான அணியாக திகழ்கிறது. தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுக்கின்றனர். குறிப்பாக இளம் தொடக்க வீரர் ஃபின் ஆலன் அபாரமாக ஆடிவருகிறார். அவர் அமைத்து கொடுத்த அதிரடியான தொடக்கத்தால் தான், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் சூப்பர் 12 போட்டியில் 200 ரன்களை குவித்து, 89 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார  வெற்றி பெற்றது.

மிடில் ஆர்டரில் கிளென் ஃபிலிப்ஸ் செம ஃபார்மில் இருக்கிறார். இந்த உலக கோப்பையில் ஒரு சதமும் அடித்திருக்கிறார். டேரைல் மிட்செலும் ஓரளவிற்கு நன்றாக ஆடிவருகிறார். முக்கியமான போட்டிகளில் சிறப்பாக ஆடும் திறமை வாய்ந்தவர் மிட்செல். கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபார்ம் தான் கவலையளித்தது. ஆனால் அவரும் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் அபாரமாக பேட்டிங் விளையாடி அரைசதம் அடித்தார். எனவே பேட்டிங் ஆர்டர் நியூசிலாந்து அணிக்கு வலுவாகவே உள்ளது. அதனால் அரையிறுதி போட்டியில் பேட்டிங் ஆர்டரில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது.

மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி ஆகிய 2 ஸ்பின்னர்களும் வழக்கம்போலவே அபாரமாக பந்துவீசி மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்திவருகின்றனர். டிரெண்ட் போல்ட் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். டிம் சௌதி மற்றும் லாக்கி ஃபெர்குசனும் நன்றாக பந்துவீசிவருகின்றனர். 6ஆவது பவுலிங் ஆப்சனான ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம், பேட்டிங், பவுலிங் இரண்டிலும் ஓரளவிற்கு பங்களிப்பு செய்கிறார். எனவே நியூசிலாந்து அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.

அதேசமயம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பெரும் பிரச்னையாக இருந்துவந்த நிலையில், பாகிஸ்தான் அணி பெரிதும் நம்பியிருந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பாபர் ஆசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோரும் சோபிக்காததால் தான் பாகிஸ்தான் அணி சுமாராக ஆடியது. ஃபகர் ஜமானுக்கு மாற்று வீரராக அணிக்குள் வந்த முகமது ஹாரிஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி அணிக்கு வலுசேர்த்துள்ளார். ஷான் மசூத், ஷதாப் கான், இஃப்டிகார் அகமது, முகமது நவாஸ் ஆகியோரும் நன்றாக ஆடுவதால் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வலுப்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணியின் பவுலிங்கை பொறுத்தமட்டில் எந்த பிரச்னையும் இல்லை. ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், முகமது வாசிம் ஆகிய நால்வரும் தங்களது வேகத்தில் எதிரணிகளை மிரட்டுகின்றனர். ஸ்பின் பவுலிங்கில் ஷதாப் கான், முகமது நவாஸுடன் தேவைப்படும்போது இஃப்டிகாரும் சிறப்பாக செயல்படுகிறார். பேட்டிங் தான் அந்த அணியின் பெரிய பிரச்னையாக இருந்துவந்த நிலையில், முகமது ஹாரிஸ், ஷதாப் கான், ஷான் மசூத் ஆகியோர் நம்பிக்கையளிப்பதால் பாகிஸ்தான் அணி உற்சாகமும் உத்வேகமும் அடைந்துள்ளது.

ஃபார்மில் இல்லாத பாபர் அசாம் ஆரம்பத்திலேயே ஆட்டமிழப்பது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைகிறது. அதற்கு பதிலாக ரிஸ்வானுடன் முகமது ஹாரிஸ் தொடக்க வீரராக இறக்கப்படலாம். கடைசி 2 போட்டிகளில் அதிரடியாக பேட்டிங் ஆடிய முகமது ஹாரிஸ் தொடக்க வீரராக இறக்கப்படுவதன் மூலம், பாபர் அசாம் வீணடிக்கும் பந்துகள் வீணாகாமலும் இருக்கும். தொடக்கம் முதலே அடித்து ஆடி நல்ல தொடக்கத்தை ஹாரிஸ் அமைத்து கொடுக்கும்பட்சத்தில் அது பாகிஸ்தான் அணி பெரிய ஸ்கோரை அடிக்கவும் உதவும்.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs பாகிஸ்தான்
  • இடம் - சிட்னி கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 28
  • பாகிஸ்தான் - 17
  • நியூசிலாந்து - 11

உத்தேச லெவன்

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் ஆசம் (கே), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா.

நியூசிலாந்து: ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன்(கே), க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, லாக்கி ஃபெர்குசன், டிரென்ட் போல்ட்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: டெவோன் கான்வே, முகமது ரிஸ்வான்
  • பேட்டிங்: கிளென் பிலிப்ஸ், இஃப்திகார் அகமது, முகமது ஹாரிஸ்
  • ஆல்ரவுண்டர்கள்: மிட்செல் சான்ட்னர், ஷதாப் கான், முகமது நவாஸ்
  • பந்துவீச்சு: ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், டிம் சவுத்தி.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை