ஐபிஎல் 2021: மும்பை இந்தியஸுடன் இணைந்த பாண்டியா பிரதர்ஸ்!
ஐபிஎல் 14ஆவது சீசனின் இரண்டாம் பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது. மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதன்படி கடந்த வாரமே இரு அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றடைந்து, தனிமைப்படுத்துதலை முடித்து தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உள்ள ஐபிஎல் அணிகள் இம்மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்த்த நட்சத்திர வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியா இருவரும் நேற்றைய தினம் ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தனர்.
Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
அவர்கள் இருவரும் சக அணி வீரர்கள் தங்கியிருக்கு விடுதிக்கு செல்லும் காணொளியை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது. தற்போது இக்காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.