ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Mon, Apr 25 2022 11:07 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ஏற்கெனவே நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வியடைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இப்போட்டியில் முந்தைய தோல்விக்கு பழித்தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இடம் - வான்கடே மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி 6 புள்ளிகள் மட்டுமே பெற்று எட்டாவது இடத்தில் இருக்கிறது. முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று சீசனைத் தொடங்கிய அந்த அணி, கடைசி 4 போட்டிகளீல் மூன்றில் தோற்றிருக்கிறது. 

முந்தைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கெதிராக படுதோல்வியடைந்தது பஞ்சாப் கிங்ஸ். அத்தனை பேட்ஸ்மேன்கள் இருந்தபோதும், அனைவரும் சொதப்ப, 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது பஞ்சாப் கிங்ஸ். அதை 57 பந்துகள் மீதம் வைத்து மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது டெல்லி. அதனால், பஞ்சாப் அணியின் ரன்ரேட் பெரிய அளவில் அடிவாங்கியது. 

தொடர்ந்து வாய்ப்புகளைப் பயன்படுத்துக்கொள்ளத் தவறும் ஜானி பேர்ஸ்டோவுக்குப் பதிலாக மீண்டும் இலங்கையின் பனுகா ராஜபக்‌ஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆறு பேட்ஸ்மேன்கள் மட்டும் இருந்தது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்ததால், நாதன் எல்லிஸ் இடத்தில் மீண்டும் ஒடியன் ஸ்மித் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோ 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்றிருக்கிறது. ஐந்து போட்டிகளில் தோற்றிருப்பதால் புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. முதல் 4 போட்டிகளில் தோற்றிருந்த சூப்பர் கிங்ஸ், கடைசி 3 போட்டிகளில் இரண்டில் வென்றிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகளை வீழ்த்தியிருக்கிறது சி.எஸ்.கே. 

தங்கள் மிகப்பெரிய ரைவல் மும்பை இந்தியன்ஸை கடைசிப் பந்தில் வீழ்த்தி பரபரப்பான வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 156 ரன்கள் மட்டும் எடுக்க, அதை தோனியின் ஃபினிஷோடு முடிவுக்குக் கொண்டுவந்தது சூப்பர் கிங்ஸ். முதல் ஓவரிலேயே மும்பையின் இரு ஓப்பனர்களையும் வெளியேற்றி ஆட்ட நாயகன் விருதும் பெற்றார் சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றங்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. இந்தப் போட்டியிலும் மொயீன் அலி இல்லாமல்தான் சூப்பர் கிங்ஸ் களமிறங்கும்.

இந்த இரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ். இதனால் முந்தைய தோல்விக்கு பழித்தீர்க்கும் முடிவோடு சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 27
  • சிஎஸ்கே வெற்றி - 16
  • பஞ்சாப் கிங்ஸ் வெற்றி - 11

உத்தேச அணி 

பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகர்வால், ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், ககிசோ ரபாடா, நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், வைபவ் அரோரா.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா , எம்எஸ் தோனி, மிட்செல் சான்ட்னர், டுவைன் பிராவோ, முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷனா, டுவைன் பிரிட்டோரியஸ்.

ஃபேண்டஸி லெவன்

  • கீப்பர் - ஜிதேஷ் சர்மா
  • பேட்ஸ்மேன்கள் - ராபின் உத்தப்பா , சிவம் துபே, ஷிகர் தவான், மயங்க் அகர்வால்
  • ஆல்-ரவுண்டர்கள் - லியாம் லிவிங்ஸ்டோன், ரவீந்திர ஜடேஜா
  • பந்துவீச்சாளர்கள் – ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, மஹீஷ் தீக்ஷனா, டுவைன் பிராவோ
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை