மனீஷ் பாண்டேவின் சாதனையை முறியடித்த குயின்டன் டி காக்!

Updated: Thu, Mar 27 2025 14:23 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துருவ் ஜூரேல் 33 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகியோர் தலா 25 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. கேகேஆர் தரப்பில் வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணியில் மொயீன் அலி 5 ரன்னிலும், கேப்டன் அஜிங்கியா ரஹானே 18 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குயின்டன் டி காக் 8 பவுண்டரி 6 சிக்ஸர்கள் என 97 ரன்களையும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 22 ரன்களையும் சேர்த்து வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் ஆட்டநயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் டி காக் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி, இந்தப் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக குயின்டன் டி காக் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்தார், இது தற்போது ஒரு இலக்கைத் துரத்தும்போது கேகேஆர் அணிக்காக எந்த வீரரும் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக மாறியுள்ளது.

முன்னதாக இந்த சாதனை 11 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2014 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கேகேஆர் அணிக்காக விளையாடிய மனீஷ் பாண்டே 94 ரன்கள் எடுத்ததே இதுநாள்வரை சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர்த்து ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக அரைசதங்கள் அடித்த விக்கெட் கீப்பர்களில் மகேந்திர சிங் தோனியின் சாதனையை குயின்டன் டி காக் சமன் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி இப்போட்டியில் குயின்டன் டி காக் அரைசதம் கடந்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது 24ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்துள்ளார். முன்னதாக இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 24 சதங்களை அடித்து இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது குயின்டன் டி காக் அதனை சமன்செய்துள்லார். இந்த பட்டியளில் இந்திய வீரர் கேஎல் ராகுல் 27 அரைசதங்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

ஐபிஎல் தொடரில் அதிக 50+ ஸ்கோர்கள் (விக்கெட் கீப்பர்கள்)

  • 27 - கேஎல் ராகுல்
  • 24 - குயின்டன் டி கக
  • 24 - எம்எஸ் தோனி
  • 21 - தினேஷ் கார்த்திக்
  • 19 - சஞ்சு சாம்சன்
  • 18 - ரிஷப் பந்த்
  • 18 - ராபின் உத்தப்பா
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை