PAK-W vs BAN-W, WCWC 2025: மகளிர் உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் வங்கதேச அணியின் அறிமுக வீராங்கனை ருபியா ஹைதர் அரைசதம் கடந்து அசத்தியதுடன், அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Advertisement

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது செப்டம்பட் 30ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கிடது. இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொழும்புவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஒமைமா சொஹைல் மற்றும் சித்ரா அமீன் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

மேற்கொண்டு அணியின் மற்றொரு தொடக்க வீரர் முனீபா அலியும் 17 ரன்களிலும், ரமீன் ஷமின் 23 ரன்னிலும், அலியா ரியாஸ் 13 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த சித்ரா நவாஸ் - கேப்டன் ஃபாத்திமா சனா இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். இதில் ஃபாத்திமா சனா 15 ரன்களுக்கும், ஃபாத்திமா சனா 22 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டையானா பைக் 16 ரன்களைச் சேர்த்தார். 

இதனால் பாகிஸ்தான் மகளிர் அணி 38.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்களில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் ஷொர்னா அக்தர் 3 விக்கெட்டுகளையும், மருஃபா அக்தர், நஹிதா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் ஃபர்ஹானா ஹாக் 2 ரன்னிலும், ஷமிம் அக்தர் 10 ரன்னிலும், கேப்டன் நிகர் சுல்தானா 23 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ருபியா ஹைதர் - ஷோபனா மோஸ்ட்ரி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

Also Read: LIVE Cricket Score

இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருபியா ஹைதர் தனது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினர். மேற்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருபியா ஹைதர் 54 ரன்களையும், சோபனா மோஸ்ட்ரி 24 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் வங்கதேச அணி 31.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளனர். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருபியா ஹைதர் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News