Tamil cricket news
Ashes 2023: முதலிரு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்து எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி முடிவடைந்த பின்னர் கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது.
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரும் 16ஆம் தேதி பர்மிங்ஹாமில் தொடங்க உள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிராக வரும் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடியில் பங்கேற்கிறது.