SL vs WI, 1st Test, Day 3: ஃபாலோ ஆனை தவிர்த்தது வெஸ்ட் இண்டீஸ்!
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கல்லேவில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 386 ரன்களைச் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் இலங்கை கேப்டன் கருணரத்னே சதம் விளாசினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் போது 6 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்து இக்கட்டான நிலையில் இருந்தது.
இதையடுத்து மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் அதிரடியாக விளையாடி 45 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 36 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் 10ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரகீம் கார்ன்வால் 39 ரன்களைச் சேர்த்து ஃபாலோ ஆனை தவிர்த்தார். இதைத்தொடர்ந்து மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்களைச் சேர்த்துள்ளது.