நோமன் அலி அபார பந்துவீச்சு; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்!
பாகிஸ்தன் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றr. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக இமாம் உல் ஹக் மற்றும் சல்மான் அலி ஆகா ஆகியோர்தலா 93 ரன்களையும், ஷான் மசூத் 76 ரன்களையும், முகமது ரிஸ்வான் 75 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சேனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் டோனி டி ஸோர்சி 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 104 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 71 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 269 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் முன்னிலையும் பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக் 41 ரன்களையும், பாபர் அசாம் 42 ரன்களையும், சௌத் ஷகீல் 38 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 167 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானதுடன், தென் ஆப்பிரிக்காவுக்கு 277 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் செனுரன் முத்துசாமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் டெவால்ட் பிரீவிஸ் 54 ரன்களையும், ரியன் ரிக்கெல்ட்ன் 45 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 183 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் நொமன் அலி, ஷாஷீன் அஃப்ரிடி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.