ஐபிஎல் திருவிழா 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Tue, Apr 05 2022 10:52 IST
Image Source: Google

ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 13-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 22  போட்டிகளில் நேருக்கு நேர் மோதியது. இதில் பெங்களூர் அணி 12 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 10 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - வான்கேடே மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதிரடியாக ஆடி வருகிறது. இதுவரை 2 போட்டிகள் ஆடிய ராஜஸ்தான் அணி, இரண்டிலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 

பேட்டிங் வரிசை, பவுலிங் வரிசை என இரண்டிலும் பக்க பலமாக உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்றால் ஹட்-ட்ரிக் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக்கொள்ளும்.

அதேசமயம் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் அபார பந்துவீச்சின் காரணமாக பெங்களூர் அணி வெற்றிபெற்றுள்ளது. 

அதேபோல பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இரண்டாம் போட்டியில் 205 ரன்கள் அடித்தும் தோல்வியை சந்தித்தது. இன்று ரணஸ்தன் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றால் பெங்களூர் அணி, புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. இதனால் இன்றைய போட்டி பெங்களூர் அணிக்கு முக்கியமான போட்டியாகும்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 22
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 10
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 12

உத்தேச லவென்

ராஜஸ்தான் ராயல்ஸ் - ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (c), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நவ்தீப் சைனி, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஃபாஃப் டு பிளெசிஸ் (C),அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் , ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக்
  • பேட்டர்ஸ் - ஷிம்ரான் ஹெட்மையர், ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலி
  • ஆல்ரவுண்டர்கள் - வனிந்து ஹசரங்க
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், ட்ரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷல் படேல்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை