ஆசிய கோப்பை தொடரில் அவர் விளையாட வாய்ப்பில்லை - ரவி சாஸ்திரி!

Updated: Wed, Aug 16 2023 13:48 IST
Image Source: Google

இந்தியாவில் இந்த ஆண்டு வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், இந்திய அணி எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யப் போகிறது என்ற குழப்பமே அதிக அளவில் நீடித்து வருகிறது.

ஏனெனில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் காயமடைந்திருப்பது தற்போது இந்திய அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. அதோடு உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடர் நடைபெற இருப்பதனால் இந்த ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் அணியே பெரும்பாலும் உலகக்கோப்பை தொடருக்கான அணியாக இருக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரரான கேஎல் ராகுல் இடம்பெற வாய்ப்பில்லை என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் அவர் காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவதால் அவர் ஆசிய கோப்பை தொடருக்கான அணியின் பிளேயிங் லெவனில் இருக்க மாட்டார் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய அவர், “என்னை பொறுத்தவரை கே.எல் ராகுல் தற்போது தான் மெல்ல மெல்ல காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். எனவே அவர் ஆசிய கோப்பை தொடரில் இடம்பெறுவதும் கடினம் தான். அதேபோன்று கே.எல். ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். ராகுல் காயத்திலிருந்து குணமடைந்து வந்தாலும் உடனே அவரது பேட்டிங் திறனை பழைய நிலைக்கு கொண்டு வருவது முடியாத காரியம்தான்” எனு இவ்வாறு அவர் கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை