ஆசிய கோப்பை 2025: அனைத்து அணிகள் மற்றும் வீரர்களின் பட்டியல்!
Asia Cup 2025 Squads: ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அணியின் முழு விவரத்தையும் இந்த பதிவில் பார்ப்போம்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்த தொடரின் முதல் போட்டியில், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்திய அணி செப்டம்பர் 10ஆம் தேதி முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது. மேலும், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் ஒவ்வொரு அணியிலும் யார் யார் இடம்பிடித்துள்ளன்ர் என்பது குறித்து பார்ப்போம்.
2025 ஆசியக் கோப்பை டி20க்கான இந்திய அணி
இந்திய அணி: சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரின்கு சிங்
கூடுதல் வீரர்கள்: பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
2025 ஆசிய கோப்பை டி20க்கான பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரப், ஃபகர் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், சல்மான் மிர்சா, ஷஹீன் அப்ரிடி, சுபியான் மொகிம்
2025 ஆசியக் கோப்பை டி20க்கான இலங்கை அணி
இலங்கை கிரிக்கெட் அணி: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவனிடு பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், கமில் மிஷாரா, தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, சாமிக்க கருணாரத்ன, மஹிஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார, மதிஷ பத்திரன
2025 ஆசிய கோப்பை டி20க்கான வங்கதேச அணி
வங்கதேச கிரிக்கெட் அணி: லிட்டன் தாஸ் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தன்ஜித் ஹசன், பர்வேஸ் ஹுசைன் எமன், சைஃப் ஹசன், தௌஹித் ஹ்ரிடோய், ஜாக்கர் அலி அனிக், ஷமிம் ஹுசைன், நூருல் ஹசன் சோஹன், மஹேதி ஹசன், ரிஷாத் ஹுசைன், நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், தஞ்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஷைஃப் உதீன்
2025 டி20 ஆசிய கோப்பைக்கான ஆஃப்கானிஸ்தான் அணி
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி: ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், தர்வீஷ் ரசூலி, செடிகுல்லா அடல், அஸ்மத்துல்லா உமர்சாய், கரீம் ஜனத், முகமது நபி, குல்பாடின் நைப், ஷரபுதீன் அஷ்ரப், முகமது இஷாக், முஜீப் உர் ரஹ்மான், அல்லா கசன்பர், நூர் அகமது, ஃபரித் மாலிக், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி
2025 ஆசிய கோப்பை டி20க்கான ஹாங்காங் அணி
ஹாங்காங் கிரிக்கெட் அணி: யாசிம் முர்தாசா (கேப்டன்), பாபர் ஹயாத், ஜீஷன் அலி, நியாசாகத் கான் முகமது, நஸ்ருல்லா ராணா, மார்ட்டின் கோட்ஸி, அன்ஷுமன் ராத், கல்ஹான் மார்க் சாலு, ஆயுஷ் ஆஷிஷ் சுக்லா, முகமது அய்ஜாஸ் கான், அதிக் உல் ரஹ்மான் இக்பால், கிஞ்சின்ட் ஷா, அடில் மஹ்மூத், ஹாரூன் முகமது அர்ஷாத், அலி ஹசன், ஷாஹித் வாசிஃப், கசன்ஃபர் முகமது, முகமது வஹீத் அனஸ் கான், எஹ்சான் கான்
2025 டி20 ஆசிய கோப்பைக்கான ஓமன் அணி
ஓமன் கிரிக்கெட் அணி: ஜதீந்தர் சிங் (கேப்டன்), ஹம்மத் மிர்சா, விநாயக் சுக்லா, சுபியான் யூசுப், ஆஷிஷ் ஒடெடெரா, அமீர் கலீம், முகமது நதீம், சுபியான் மஹ்மூத், ஆர்யன் பிஷ்ட், கரண் சோனாவலே, ஜிகாரியா இஸ்லாம், ஹஸ்னைன் அலி ஷா, பைசல் ஷா, முகமது இம்ரான், நதீம் கான், ஷகீல் அகமது, சமய் ஸ்ரீவஸ்தவா
2025 டி20 ஆசிய கோப்பைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி
Also Read: LIVE Cricket Score
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி: முஹம்மது வாசிம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, ஆர்யன்ஷ் ஷர்மா, ஆசிப் கான், துருவ் பராஷர், ஈதன் டிசோசா, ஹைதர் அலி, ஹர்ஷித் கௌசிக், ஜுனைத் சித்திக், மதியுல்லா கான், முஹம்மது ஃபரூக், முஹம்மது ஜவதுல்லா, முஹம்மது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ரோஹித் கான், சிம்ரன்ஜித் சிங், சாகிர் கான்