ஸ்ரேயாஸ் ஐயரை வர்ணனையில் கடுமையாக சாடிய ரவி சாஸ்திரி!

Updated: Mon, Sep 04 2023 21:47 IST
Image Source: Google

கடந்த இரு ஆண்டுகளாக முக்கிய வீரர்களின் காயம் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தை பெரிய சிக்கலுக்கு உள்ளாக்கி வருகிறது. ஒவ்வொரு பெரிய தொடர்களின் போதும் அணியை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஒவ்வொரு தலைவலி வந்து கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக தற்பொழுது இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்க முடியாமல் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இருக்கிறது. நாளை கடைசி நாள் என்பதால் கட்டாயம் அறிவித்து விடுவார்கள்.

கடைசி நாள் வரைக்கும் செல்லும் அளவுக்கு காயம் அடைந்த வீரர்கள் அணிக்கு முக்கியமான வீரர்களாக இருக்கிறார்கள். இதில் மிக முக்கியமாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் இருவரும் இருந்தார்கள். இதில் கே எல் ராகுல் தற்பொழுதுதான் உடல் தகுதியை எட்டி இருக்கிறார். இவர் ஒருவருக்காக உலகக் கோப்பை இந்திய அணியை அறிவிப்பதில் கடைசி நிலை வரைக்கும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடன் சேர்ந்து உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவாரா என்று பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஸ்ரேயாஸ் ஐயர், ஆசியக் கோப்பைக்கு முன்பாக உடல் தகுதியை எட்டியதோடு, தற்பொழுது ஆசியக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்று விளையாடும் வருகிறார். இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதிய ஆசிய கோப்பையின் முதல் சுற்று முதல் போட்டியில், ஸ்ரேயாஸ் தனது இன்னிங்ஸை மிகவும் நம்பிக்கையுடன் ஆரம்பித்தார். ஆனால் அதிர்ஷ்டம் இல்லாமல் ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் இன்று இந்தியா நேபாள் அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில், முகமது சிராஜ் ஓவரில் ஸ்லீப்பில் ஒரு எளிமையான கேட்சை ஸ்ரேயாஸ் தவறவிட்டார். அந்த இடத்தில் பிடிக்கும் அளவுக்கு கண்பார்வையில் மிகச் சரியாக பந்து வந்தும், அதை அவர் தவறவிட்டார்.

இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சிளர் ரவி சாஸ்திரி கடுமையான தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். இதுபற்றி பேசிய அவர், “இது என்ன இப்படி ஒரு முறை. உண்மையிலும் இது ஒரு ஸ்ட்ரைட் ஃபார்வேர்ட் கேட்ச். எவ்வளவு நேரம் தேவையோ, அவ்வளவு நேரம் பந்தை பிடிக்க இருந்தது. ஒரு விக்கெட் கீப்பரின் பார்வையில் இருந்து இதை மன்னிக்கவே முடியாது. இது நேரடியாக கைக்கு வந்த கேட்ச்” என்று வர்ணனையில் இருந்த பொது கூறினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை