ஐபிஎல் 2021 எலிமினேட்டர்: ஆர்சிபி vs கேகேஆர் - உத்தேச லெவன்

Updated: Mon, Oct 11 2021 12:38 IST
RCB v KKR, Probable Playing XI - The Eliminator
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றுப்போட்டியில் சிஎஸ்கே அணி டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

இந்நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, 2ஆவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறும்; தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேறும். 

இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

கேகேஆர் அணியில் கடந்த போட்டியில் ஆடிய ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு பதிலாக ஆண்ட்ரே ரஸ்ஸல் முழு விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்சிபி : விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், கேஎஸ் பரத், கிளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஷபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், ஜார்ஜ் கார்டன், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

கேகேஆர்: வெங்கடேஷ் ஐயர், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஈயான் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், லோக்கி ஃபர்குசன், வருண் சக்கரவர்த்தி, ஷிவம் மாவி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை