ஐபிஎல் திருவிழா 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!

Updated: Wed, Mar 30 2022 12:15 IST
Image Source: Google

ஐபிஎல் 15 ஆவது சீசனின் இன்றைய லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு -  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது. 

இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நவி மும்பையில் உள்ள டி.இய். பட்டெல் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

போட்டி தகவல்கள் 

மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இடம் - டிஒய் பட்டேல் மைதான், நவி மும்பை
நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தனது முதல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. அதுவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பேட்டிங் வலிமையாகவே இருந்தது. கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் அதிரடியாக 88 ரன்களை விளாசினார். அதே நேரத்தில் அந்த போட்டியில் விராட் கோலி 41 ரன்கள், தினேஷ் கார்த்திக் 32 ரன்கள் என அடித்து நல்ல பார்மில் உள்ளனர். ஆனால் பவுலர்கள் சிறப்பாக செயல்படாததால், 205 ரன்களை எடுத்தும் அந்த அணி தோல்வியை தழுவியது.

மறுபக்கம் கொல்கத்தா அணியில்,ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், ராணா போன்ற வீர்ரர்கள் பேட்டிங்கிலும், உமேஷ் யாதவ், வருன் சக்கரவர்த்தி, நரைன் போன்ற வீரர்கள் பவுலிங்கிலும் சிறப்பாகதங்களின் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். முதல் போட்டியை வெல்ல ஆர்சிபி அணியும், வெற்றியை தொடர கொல்கத்தா அணியும் முனைப்பு காட்டுவதால், இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 30
  • பெங்களூரு வெற்றி - 13
  • கொல்கத்தா வெற்றி - 17

உத்தேச லெவன்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : ஃபாஃப் டு பிளெசிஸ்(கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் , ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்/கரன் ஷர்மா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷெல்டன் ஜாக்சன், சிவம் மவி, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - தினேஷ் கார்த்திக்
  • பேட்டர்ஸ் - அஜிங்கியா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலி
  • ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், வனிந்து ஹசரங்க
  • பந்துவீச்சாளர்கள் - உமேஷ் யாதவ், ஹர்ஷல் படேல்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை