தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று டர்பனில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா
- இடம் - கிங்ஸ்மெட், டர்பன்
- நேரம் - இரவு 9.30 மணி (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியிலேயே அதிரடியாக செயல்பட்டு அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அந்த அணியில் மிட்செல் மார்ஷ், டிம் டேவிட் ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பேட்டிங்கில் பலம் செர்த்தனர். அவர்களுடன் ஜோஷ் இங்கிலிஸ், டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட் ஆகியோரும் அதிரடியாக செயல்பட்டால் நிச்சயம் இப்போட்டியிலும் ரன் குவிப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அறிமுக வீரரான தன்வீர் சங்கா தனது முதல் போட்டியிலேயே தென் ஆப்பிரிக்க பேட்டர்களை தடுமாறச்செய்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருடன் நாதன் எல்லீஸ், சீன் எபோட், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஸ்பென்ஸர் ஜான்சன் ஆகியோரும் இருப்பதும் அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் சொந்த மண்ணில் விளையாடும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் படுதோல்வியைச் சந்தித்தது. அதிலும் குறிப்பாக ரீஸா ஹென்றிக்ஸைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மார்க்ரம், டெவால்ட் பிரீவிஸ், டெம்பா பவுமா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அதேசமயம் பந்துவீச்சில் மார்கோ ஜான்சென், லிஸாத் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்ஸி, லுங்கி இங்கிடி, சிசாண்டா மகாலா, கேசவ் மகாராஜ் போன்றோர் உள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு சவாலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 23
- தென் ஆப்பிரிக்கா - 08
- ஆஸ்திரேலியா - 15
உத்தேச லெவன்
ஆஸ்திரேலியா - மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கே), ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி, சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஸ்பென்சர் ஜான்சன்.
தென் ஆப்பிரிக்கா - டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், டெவால்ட் பிரீவிஸ், டொனோவன் ஃபெரீரா, மார்கோ ஜான்சென், கேசவ் மகாராஜ், லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி, சிசாண்டா மாகலா.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - ஜோஷ் இங்கிலிஸ்
- பேட்ஸ்மேன்கள் - டிராவிஸ் ஹெட், ராஸ்ஸி வான் டெர் டுசென், டிம் டேவிட், ஐடன் மார்க்ரம் (துணை கேப்டன்)
- ஆல்-ரவுண்டர்கள் - மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்கோ ஜான்சென்
- பந்துவீச்சாளர்கள்- தப்ரைஸ் ஷம்சி, ஸ்பென்சர் ஜான்சன், நாதன் எல்லிஸ்
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.