எஸ்ஏ20 2025: அணிகள் தக்கவைத்த, வாங்கிய மற்றும் விடுவித்த வீரர்களின் விவரம்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்திற்கு முன்னரே வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டின. இந்நிலையில் எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தக்கவைத்த, ஒப்பந்தம் செய்த மற்றும் அணியில் இருந்து வெளியேற்றிய வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன. அதனை இப்பதிவில் பார்ப்போம்.
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்
- தக்கவைத்த வீரர்கள்: நூர் அகமது, மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஜூனியர் டாலா, குயின்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், வியான் முல்டர், நவீன்-உல்-ஹக், பிரைஸ் பார்சன்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், ஜேசன் ஸ்மித், ஜான்-ஜான் ஸ்மட்ஸ், ப்ரீனெலன் சுப்ரயன்.
- புதிதாக வாங்கிய வீரர்கள்: பிராண்டன் கிங், கேன் வில்லியம்சன், கிறிஸ் வோக்ஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ்
- விடுவிக்கப்பட்ட வீரர்கள்: கைல் மேயர்ஸ், கீமோ பால், ரீஸ் டாப்லி, பானுகா ராஜபக்சே, டோனி டி சோர்ஜி, நிக்கோலஸ் பூரன், ரிச்சர்ட் க்ளீசன், ஆஷ்டன் அகர்.
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்
- தக்கவைத்த வீரர்கள்: ஃபாஃப் டு பிளெசிஸ் - கேப்டன், மொயீன் அலி, நந்த்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, லியூஸ் டு ப்ளூய், டொனோவன் ஃபெரீரா, சிபோனெலோ மகன்யா, இம்ரான் தாஹிர், டேவிட் வைஸ், லிசாட் வில்லியம்ஸ்.
- புதிதாக வாங்கிய வீரர்கள்: மஹீஷ் தீக்ஷ்னா, ஜானி பேர்ஸ்டோவ், தப்ரைஸ் ஷம்ஸி
- விடுவிக்கப்பட்ட வீரர்கள்: டியான் கலீம், ரீசா ஹென்ட்ரிக்ஸ், கைல் சிம்மண்ட்ஸ், ஆரோன் பாங்கிசோ, சாம் குக், ஜாஹிர் கான், ரொமாரியோ ஷெப்பர்ட், வெய்ன் மேட்சன், ரோனன் ஹெர்மன், டக் பிரேஸ்வெல்
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்
- தக்கவைத்த வீரர்கள்: டெவால்ட் ப்ரீவிஸ், கானர் எஸ்டெர்ஹூய்சென், தாமஸ் கேபர், ஜார்ஜ் லிண்டே, டெலானோ போட்ஜீட்டர், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், ரஸ்ஸி வான் டெர் டுசென்
- விடுவிக்கப்பட்ட வீரர்கள்: பியூரன் ஹென்ட்ரிக்ஸ், டுவான் ஜான்சன், கிராண்ட் ரோலோஃப்சென், நீலன் வான் ஹெர்டே
பார்ல் ராயல்ஸ்
- தக்கவைத்த வீரர்கள்: கீத் டட்ஜியன், ஜார்ன் ஃபோர்டுயின், க்வேனா மபாகா, டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, நகாபா பீட்டர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், மிட்செல் வான் ப்யூரன், கோடி யூசுஃப்
- புதிதாக வாங்கிய வீரர்கள்: தினேஷ் கார்த்திக், ஜோ ரூட், டியான் கலீம்
- விடுவிக்கப்பட்ட வீரர்கள்: அனே விலாஸ், தப்ரைஸ் ஷம்சி, ஃபெரிஸ்கோ ஆடம்ஸ், இவான் ஜோன்ஸ், விஹான் லுபே, ஜோஸ் பட்லர்
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்
- தக்கவைத்த வீரர்கள்: ஈதன் போஷ், டேரின் டுபாவில்லன், வில் ஜாக்ஸ், செனுரன் முத்துசாமி, ஜிம்மி நீஷம், அன்ரிச் நார்ட்ஜே, வெய்ன் பார்னெல், மைக்கேல் பிரிட்டோரியஸ், ரைலீ ரூஸோவ், ஸ்டீவ் ஸ்டோல்க், தியான் வான் வுரென், கைல் வெர்ரைன்
- புதிதாக வாங்கிய வீரர்கள்: வில் ஸ்மீத், ரஹ்மனுல்லா குர்பாஸ்
- விடுவிக்கப்பட்ட வீரர்கள்:தியூனிஸ் டி ப்ரூயின், அடில் ரஷித், பில் சால்ட், ஷேன் டாட்ஸ்வெல், கொலின் இங்க்ராம், கார்பின் போஷ், மேத்யூ போஸ்ட், பால் ஸ்டிர்லிங், ஹார்டஸ் வில்ஜோன், ஜாக் ஸ்னிமேன், கொலின் அக்கர்மேன்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்
- தக்கவைத்த வீரர்கள்: ஐடன் மார்க்ராம், ஒட்னியல் பார்ட்மேன், மார்கோ ஜான்சன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டாம் ஆபெல், ஜோர்டான் ஹெர்மன், பேட்ரிக் க்ரூகர்,பெயர்ஸ் ஸ்வான்போயல், சைமன் ஹார்மர், லியாம் டாசன், காலேப் செலேகா, ஆண்டிலே சிமெலேன்.
- புதிதாக வாங்கிய வீரர்கள்: டேவிட் பெடிங்ஹாம், ரோலோஃப் வான் டெர் மெர்வ், ஸாக் கிரௌலி, கிரெய்க் ஓவர்டன்
- விடுவிக்கப்பட்ட வீரர்கள்: சரேல் எர்வீ, ஆயா கமானே, ஆடம் ரோஸிங்டன், டெம்பா பவுமா, டேவிட் மலான், டேனியல் வோரால்