Mi Cape Town vs Sunrisers Eastern Cape Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எம்ஐ கேப்டவுன் அணி இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறிய நிலையில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் எம்ஐ கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது இன்று (பிப்ரவரி 08) ஜோஹன்னஸ்பர்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு சீசனில் இதற்கு முன் இவ்விரு அணிகளும் மோதிய இரண்டு லீக் போட்டிகளின் முடிவில் எம்ஐ கேப்டவுன் அணி இரண்டிலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதனால் இறுதிப்போட்டியில் கேப்டவுன் அணி ஆதிக்கத்தை செலுத்தில் முதல் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா அல்லது சன்ரைசர்ஸ் அணி முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுப்பதுடன் ஹாட்ரிக் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

MICT vs SEC, SA20 2025: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - எம்ஐ கேப்டவுன் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்
  • இடம் -  வாண்டரர்ஸ் மைதானம், ஜோஹன்னஸ்பர்க்
  • நேரம் - பிப்ரவரி 08,  இரவு 9.00 மணி (இந்திய நேரப்படி)

MICT vs SEC Pitch Report

இப்போட்டி ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்க்ளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்பதால், இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவதையே விரும்புகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 27 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 14 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 13 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 176 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 283 ரன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

MICT vs SEC: Where to Watch?

Advertisement

எஸ்ஏ20 லீக் தொடரின் அனைத்து போட்டிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

MICT vs SEC Dream11 Prediction

  • விக்கெட் கீப்பர் – ரியான் ரிக்கெல்டன்(துணைக்கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • பேட்ஸ்மேன்கள் - டோனி டி ஸோர்ஸி, ஜோர்டன் ஹார்மன், ரஸ்ஸி வென்டர் டுசென், டெவால்ட் பிரீவிஸ் 
  • ஆல்-ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ராம், மார்கோ ஜான்சன் (கேப்டன்), ஜார்ஜ் லிண்டே
  • பந்து வீச்சாளர்கள் - ரஷித் கான், கிரெய்க் ஓவர்டன்

Mi Cape Town vs Sunrisers Eastern Cape Probable Playing XI

Advertisement

Sunrisers Eastern Cape Probable Playing XI : டேவிட் பெடிங்ஹாம், டோனி டி ஸோர்ஸி, ஜோர்டான் ஹர்மன், டாம் அபெல், ஐடன் மார்க்ராம்(கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கிரெய்க் ஓவர்டன், லியாம் டௌசன், ஓட்னீல் பார்ட்மேன், ரிச்சர்ட் க்ளீசன்.

Mi Cape Town Probable Playing XI: ரியான் ரிக்கெல்டன், ரஸ்ஸி வான்டெர் டுசென், ரீசா ஹென்ட்ரிக்ஸ், செதிகுல்லா அடல், டெவால்ட் பிரீவிஸ், டெலானோ போட்ஜிட்டர், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், ரஷித் கான்(கே), காகிசோ ரபாடா, டிரெண்ட் போல்ட்

MICT vs SEC Dream11 Prediction, MICT vs SEC Dream11 Team, Today Match MICT vs SEC, SA20 2025, Fantasy Cricket Tips, MICT vs SEC Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match Mi Cape Town vs Sunrisers Eastern Cape

Advertisement

Disclaimer: *இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News