டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச அணி & ஃபெண்டஸி லெவன்!
ஏழாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடர் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பை அதிகரித்து வருகிறது.
இதில் நாளை நடபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - துபாய் சர்வதேச மைதானம்
- நேரம் - மாலை 3.30 மணி
போட்டி முன்னோட்டம்
டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியுள்ளது.
அதனால் அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றிபெற்றாக வேண்டி தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அணியின் நட்சத்திர வீரர்கள் டி காக், மில்லர், வென் டெர் டூசென் ஆகியோர் தங்களது அதிரடி ஆட்டத்தை மேம்படுத்தினால் மட்டுமே அந்த அணியால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் உள்ளது.
அதேசமயம் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை நோர்ட்ஜே, ரபாடா, ஷம்ஸி, மஹாராஜ் ஆகியோர் உள்ளது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரேன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி பல ஜாம்பவான் வீரர்களை கொண்டிருந்தாலும் முதல் போட்டியில் 55 ரன்களில் சுருண்டு இங்கிலாந்திடம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
இதனால் அந்த அணி பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேசமயம் பந்துவீச்சிலும் கவனம் செலுத்தும் பட்சத்தில் அந்த அணி நிச்சயம் இப்போட்டியில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 15
- தென் ஆப்பிரிக்கா வெற்றி - 9
- வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 6
உத்தேச அணி
தென்ஆப்பிரிக்கா - குயின்டன் டி காக், டெம்பா பாவுமா (கே), ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வான் டெர் டுசன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி.
வெஸ்ட் இண்டீஸ்- எவின் லூயிஸ், லெண்டல் சிம்மன்ஸ், கிறிஸ் கெயில்/ ரோஸ்டன் சேஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், நிக்கோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட் (கே), ஆண்ட்ரே ரஸ்ஸல், டுவைன் பிராவோ, அகீல் ஹோசைன், ஓபேட் மெக்காய், ரவி ராம்பால்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக்
- பேட்டர்ஸ் - ஷிம்ரான் ஹெட்மியர், எவின் லூயிஸ், கீரான் பொல்லார்ட், ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வான் டெர் -டுசன்
- ஆல்-ரவுண்டர்கள் - டுவைன் பிராவோ
- பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா, அகீல் ஹொசைன், அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி