டி20 உலகக்கோப்பை: பட்லர், ஹேல்ஸ் அரைசதம்; நியூசிலாந்துக்கு 180 டார்கெட்

Updated: Tue, Nov 01 2022 15:04 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றுவரும் ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஹோல்ஸ் இணை களமிறங்கியது. இதில் ஹேல்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட, மறுமுனையில் வழக்கத்திற்கு மாறாக ஜோஸ் பட்லர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 39 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு, அடுத்த பந்திலேயே 52 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

பின்னர் களமிறங்கிய மொயின் அலி 5 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய ஜோஸ் பட்லர் 35 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதற்கிடையில் ஒருசில பவுண்டரிகளை அடித்த லியாம் லிவிங்ஸ்டோன் 20 ரன்கள் எடுத்த நிலையில், லோக்கி ஃபர்குசன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் களமிறங்கிய ஹேரி ப்ரூக் 7 ரன்களிலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் 47 பந்துகளில் 72 ரன்களைச் சேர்த்த டிம் சௌதீ ஓவரில் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். இறுதியில் சாம் கரண்

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் லோக்கி ஃபர்குசன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை