அலெக்ஸ் ஹேல்ஸின் சாதனையை முறியடித்த கீரன் பொல்லார்ட்!
Kieron Pollard Record: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய கீரன் பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், இத்தொடரில் இன்று நடைபெற்ற சேலஞ்சர் சுற்று ஆட்டத்தி எம்ஐ நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய கீரன் பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் கீரன் பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 46ஆவது ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர்கள் வரிசையில் கீரன் பொல்லார்ட் இங்கிலாந்தின் ஆலெக்ஸ் ஹேல்ஸை முந்தியுள்ளார். முன்னதாக அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் கீரன் பொல்லார் ஆகியோர் தலா 45 முறை ஆட்டநாயகன் விருதை வென்று மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தது.
இந்நிலையில் தற்சமயம் கீரன் பொல்லார்ட் 46அவது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்று இரண்டாம் இடத்தை சமன்செய்துள்ளார். இதில் ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல்லும் 46 முறை ஆட்டநாயகன் விருதை வென்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 60 முறை ஆட்டநாயகன் விருதை வென்று முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டி20 போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருதை வென்ற வீரர்கள்
- 60 - கிறிஸ் கெய்ல் (463 போட்டிகள்)
- 46 - க்ளென் மேக்ஸ்வெல் (477 போட்டிகள்)
- 46* - கீரோன் பொல்லார்ட் (706 போட்டிகள்)
- 45 - அலெக்ஸ் ஹேல்ஸ் (503 போட்டிகள்)
- 44 - ஆண்ட்ரே ரஸ்ஸல் (561 போட்டிகள்)
- 43 - ஷகிப் அல் ஹசன் (459 போட்டிகள்)
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 59 ரன்களையும், அகீல் ஹொசைன் 55 ரன்களையும், டோனவன் ஃபெரீரா 32 ரன்களையும் சேர்க்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது. எம்ஐ நியூயார்க் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிரிஸ்டன் லூஸ் 3 விக்கெட்டுகளையும், ருஷில் உகர்கர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய எம்ஐ நியூயார்க் அணியின் மொனாங்க் படேல் 49 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிகோலஸ் பூரன் 52 ரன்களையும், கீரன் பொல்லார்ட் 47 ரன்களைச் சேர்த்தும் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் எம்ஐ நியூயார்க் அணி 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.