டி20 உலகக்கோப்பை: இலங்கையை 158 ரன்னில் சுருட்டியது ஆஸி!

Updated: Tue, Oct 25 2022 18:16 IST
Image Source: Google

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் பெர்த்தில் விளையாடுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஸாம்பாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருக்குப் பதில் அஷ்டன் அகார் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கையில் பதும் நிசன்கா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். 

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் 5 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த பதும் நிஷங்கா - தனஞ்செய டி சில்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

பின்னர் 40 ரன்களை எடுத்திருந்த பதும் நிஷங்கா அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து 26 ரன்களில் தனஞ்செயாவும் ஆட்டமிழந்து வெளியெறினார். 

இதையடுத்து களமிறங்கிய பனுகா ராஜபக்ஷா 7, கேப்டன் தசுன் ஷனகா 3, வநிந்து ஹசரங்கா ஒரு ரன் என அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்தது. ஆனால் மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த சரித் அசலங்கா ஸ்கோரை உயர்த்தினார்.

அவருடன் ஜோடி சேர்ந்த கருணரத்னேவும் ஒரு சில பவுண்டரிகளை அடித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது. இலங்கை தரப்பில் சரித் அசலங்கா 38 ரன்களுடனும், கருணரத்னே 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை