டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது பாகிஸ்தான்!

Updated: Sun, Nov 06 2022 13:00 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை போட்டியில் குரூப்-1 பிரிவில் இருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. குரூப்-2 பிரிவில் இருந்து இந்தியா தகுதி பெற்றுவிட்டது.

குரூப்-2 பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகள் மோதிய போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு அடிலெய்ட் டில் தொடங்கியது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர் அரை இறுதிக்கு தகுதி பெறலாம் என்ற சூழலில் இரு அணிகளும் களம் இறங்கின.

இப்போட்டியில் டாஸ் ஜெயித்த வங்காள தேச கேப்டன் ஷகிப்-அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ், நஜ்முல் ஹாசைன் சாந்டோ களம் இறங்கினர். லிட்டன் தாஸ் 10 ரன்னில் ஷகின்ஷா அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து சவுமியா சர்கார் களம் வந்தார். நஜ்முல் ஹாசைன் சிறப்பாக விளையாடி ரன்னை சேர்த்தார்.

வங்காளதேச அணி 10 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன் எடுத்திருந்தது. ஷதாப்கான் வீசிய 11ஆவது ஓவரில் இரண்டு விக்கெட் விழுந்தது. சவுமியர் சர்கார் 20 ரன், ஷகீப்-அல்-ஹசன் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

சிறப்பாக விளையாடிய நஜ்முல் ஹாசைன் அரை சதம் அடித்ததும் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை இப்திகார் முகம்மது கைப்பற்றினார். அடுத்து அபிப் சைன்-மொசைக் ஹாசைன் ஜோடி விளையாடியது. அவர்கள் இருவரும் ரன்களை துரித மாக சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த ஆட்டத்தின் முடிவில் வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கும் கேப்டன் பாபர் ஆசாம் - முகனது ரிஷ்வான் இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் பாபர் ஆசாம் 33 பந்துகளில் 25 ரன்களிலும், முகமது ரிஸ்வான் 32 பந்துகளில் 32 ரன்களைச் சேர்த்திருந்த நிலையிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.

அதன்பின் வந்த முகமது நவாஸும் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பின்னர் ஜோடிச் சேர்ந்த முகமது ஹாரிஸ் - ஷான் மசூத் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியைக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

இதன்மூலம் 18.1 ஓவர்களில் பாகிஸ்தன் அணி இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிப்பெற்று அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை