Team India Playing XI Asia Cup 2025: எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கணித்துள்ளார்.

Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில், ஷுப்மன் கில்லுக்கு துணைக்கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இதில் எந்த 11 பேர் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள அந்த அணியில் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில்லிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். 

ஏனெனில் சுப்மன் கில் அணியின் துணைக்கேப்டனாக உள்ளதால் அவருக்கு தொடக்க வீரர் இடத்தை வழங்கியுள்ளார். மேலும், மூன்றாம் வரிசையில் திலக் வர்மாவையும், நான்காம் இடத்தில் சூர்யகுமார் யாதவையும் தேர்வு செய்துள்ள அவர், ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவையும், அணியின் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மாவை தேர்வு செய்துள்ளார். இதனால் அவர் தனது அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. 

மேற்கொண்டு ஷிவம் தூபே, அக்ஸர் படேல் ஆகியோருக்கும் லெவனில் வய்ப்பு வழங்கியுள்ள அவர், சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவையும், வருண் சக்ரவர்த்தியையும் தேர்வு செய்துள்ளார். இதுதவிர்த்து வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ராவை அவர் பிளேயிங் லெவனில் சேர்த்துள்ளார். இதன் காரணமாக சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹர்ஷித் ரானா ஆகியோருக்கு அவர் லெவனில் இடம் கொடுக்கவில்லை. 

Advertisement

அபிஷேக் நாயர் தேர்வு செய்த இந்திய அணி லெவன்: அபிஷேக் சர்மா, சுப்மான் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், சிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.

Also Read: LIVE Cricket Score

இந்திய அணி: அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், சஞ்சு சாம்சன், ரின்கு, ரின்கு.

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News