ஜனவரியில் இலங்கை - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்; அட்டவணை அறிவிப்பு!

Updated: Wed, Aug 20 2025 20:08 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரிலும், அதனைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.

இதில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடர் செப்டம்பர் 2ஆம் தேதி முதலும், டி20 தொடர் செப்டம்பர் 10ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. அதன்பின், செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அயர்லாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. அதேசமயம் இத்தொடர்களுக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் அடுத்தாண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வேலைகளில் இங்கிலாந்து அணி செயல்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடருக்கான அட்டவணையும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டி ஜனவரி 22ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரையிலும், டி20 தொடரானது ஜனவரி 30ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 3ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டிகளுக்கான மைதானங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இங்கிலந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. மேலும் இது டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்த தொடர் நடத்தப்படவுள்ளது. 

Also Read: LIVE Cricket Score

இலங்கை - இங்கிலாந்து தொடர் அட்டவணை

  • முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்து vs இலங்கை, ஜனவரி 22,
  • 2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து vs இலங்கை, ஜனவரி 24,
  • 3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து vs இலங்கை, ஜனவரி 27, 2026
  • முதல் டி20 : இங்கிலாந்து v இலங்கை , ஜனவரி 30, 2026
  • 2ஆவது டி20: இங்கிலாந்து vs இலங்கை, பிப்ரவரி 01, 2026
  • 3ஆவது டி20: இங்கிலாந்து vs இலங்கை, பிப்ரவரி 03, 2026
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை