T20 WC 2024, Super 8: ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் அபாரம்; அமெரிக்காவை பந்தாடி விண்டீஸ் அசத்தல் வெற்றி!

Updated: Sat, Jun 22 2024 09:33 IST
T20 WC 2024, Super 8: ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் அபாரம்; அமெரிக்காவை பந்தாடி விண்டீஸ் அசத்தல் வெற்றி! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அமெரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் மற்றும் ஆண்ட்ரிஸ் கௌஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் ஸ்டீவன் டெய்லர் 2 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் - நிதீஷ் ரெட்டி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் நிதீஷ் 20 ரன்களுக்கும், ஆண்ட்ரிஸ் கௌஸ் 29 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, அடுத்து வந்த கேப்டன் ஆரோன் ஜோன்ஸும் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கோரி ஆண்டர்சன் மாற்றும் மிலந்த் குமார் ஆகியோரும் அடுத்தடுத்து பந்துகளில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய மிலந்த் குமார் 19 ரன்களிலும், ஷால்க்விக் 18 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொபிக்க தவற, அமெரிக்க அணியானது 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ரஸல் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப் மற்றும் ஜான்சன் சார்ல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் ஜான்சன் சார்லஸ் 15 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் வழக்கம் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷாய் ஹோப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 82 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 27 ரன்களையும் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் அணியானது 10.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை