தி ஹண்ரட் ஆடவர் : லண்டனை வீழ்த்தி பர்மிங்ஹாம் அபார வெற்றி!

Updated: Sat, Jul 24 2021 10:33 IST
Image Source: Google

தி ஹண்ரட் ஆடவருக்கான தொடரில் நெற்று பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணி, லண்டன் ஸ்பிரிட் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பர்மிங்ஹாம் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது. 

அதன்படி களமிறங்கிய லண்டன் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிரௌலி அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 64 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களைச் சேர்த்தது. பர்மிங்ஹாம் அணி தரப்பில் மில்னே, டாம் ஹெல்ம், ஹோவல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பர்மிங்ஹாம் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், கேப்டன் மொயீன் அலி அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதில் 30 பந்துகளை எதிர்கொண்ட மொயீன் அலி 40 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் லண்டன் ஸ்பிரிட் அணியை வீழ்த்தி அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை