கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 5, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் மூன்றாம் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி தற்சயம் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணி முதலிரண்டு இடங்களில் நீடித்து வருகின்றன.
2. ஆசிய கோப்பை தொடர் மற்றும் முத்தரப்பு டி20 தொடர்களுக்கான முதற்கட்ட ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ரஹ்மனுல்லா குர்பாஸ், செதிகுல்லா அடல், இப்ராஹிம் ஸத்ரான், முகமது நபி, குல்பதின் நைப், அஸ்மதுல்லா ஒமர்ஸாய், அல்லா கசான்ஃபர், நூர் அஹ்மத், நவீன் உல் ஹக் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
3. இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர் 2-2 என டிராவில் முடிந்த நிலையில், முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் இரு அணிகளின் ஒருங்கிணைந்த பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்துள்ளார். அவர் தேர்ந்தெடுத்துள்ள இந்த அணியில் தொடரில் அதிக ரன்களை எடுத்த சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, பென் டக்கெட் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்காதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
4. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஆஸ்திரேலிய அணி வீரர் டிம் டேவிட்டிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதமும், ஒரு தகுதியிழப்பு புள்ளியும் அபராதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதித்துள்ளது.
Also Read: LIVE Cricket Score
5. தி ஹண்ட்ரட் மகளிர் தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஒவல் இன்விசிபிள் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லண்டன் ஸ்பிரிட் அணி நிர்ணயிக்கப்பட்ட பந்துகளின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஓவல் இன்விசிபிள் அணி இறுதிவரை போராடிய நிலையிலும் 159 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியுள்ளத்.