ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ரோவ்மன் பாவெல், மொயீன் அலி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் மும்பை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, ஜெய்ப்பூர், அஹ்மதாபாத் நகரங்களில் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்பட்டுள்ளது. சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி, கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர்கள் ரோவ்மன் பாவல் மற்றும் மொயீன் அலி ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகக்கூடும் என்று கூறப்படுகிறது. இதில் ரோவ்மன் பாவெல் சக வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் துபாயில் இருக்கும் நிலையில், இத்தொடரை அவர் தவற விடுவார் என்று கூறப்படுகிறது.
ரோவ்மன் பவலைத் தவிர, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலியும் ஐபிஎல்லின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகலாம் என்று கூறப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக மொயீன் அலி இத்தொடரில் இருந்து தனது விலக்கிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும், மற்ற வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர்களான சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்துள்ளனர்.
ஐபிஎல் 2025 தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது இத்தொடரில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 5 வெற்றிகள், 6 தோல்விகள் என மொத்தம் 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் ஆறாவது இடத்தில் உள்ளது. இதனால் எஞ்சியிருக்கும் போட்டிகளில் அந்த அணி சிறப்பான ரன் ரேட் அடிப்படையில் வெற்றிபெற்றால் மாட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Also Read: LIVE Cricket Score
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்கியா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர் (துணைக்கேப்டன்),ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங், குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அன்ரிச் நோர்ட்ஜே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி வைபவ் அரோரா, மயங்க் மார்கண்டே, ஸ்பிர்மன் பாண்டே பவல், ஸ்பிர்மன் பான்டே பவல் , அனுகுல் ராய், மொயின் அலி, சேத்தன் சகாரியா.