டிஎன்பிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் த்ரில் வெற்றி!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியும், ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தினேஷ் 39 ரன்களையும், ஃபிரான்சிஸ் 38 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து களமிறங்கிய கோவை கிங்ஸ் அணியில் சுரேஷ் குமார் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த கங்கா ஸ்ரீதர் ராஜு - அஸ்வின் வென்கடரமனன் இணை சிறப்பாக விளையாடி நல்ல ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுதது.
பின் ராஜு 30 ரன்களில் ஆட்டமிழக்க, அஸ்வின் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய சாய் சுதர்சன் அரைசதம் அடித்து நம்பிக்கை அளிக்க, மறுமுனையில் சிரான இடைவேளையில் விக்கெட்டுகளை சரிந்தன.
இதனால் கடைசி ஓவரில் கோவை அணி வெற்றி பெற 6 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய முகமது, இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன் மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.