தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு நடப்பு சாம்பியன் ஷாருக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் முன்னேறின. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய கோவை கிங்ஸ் அணிக்கு சுஜய் மற்றும் சுரேஷ் குமார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுரேஷ் குமார் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 22 ரன்களைச் சேர்த்திருந்த சுஜயும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய முகிலேஷ் ரன்கள் ஏதுமின்றியும், சாய் சுதர்ஷன் 14 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 81 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த ராம் அரவிந்த் - அதீக் உர் ரஹ்மான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். 

Advertisement

இருவரும் இணைந்து 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அதீக் உர் ரஹ்மான் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷாருக் கானும் 3 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த ராம் அரவிந்தும் 27 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த முகமது மற்றும் மணிமாறன் சித்தார்த் ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், ஓரளவு ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது 15 ரன்களையும், சித்தார்த் 7 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே சேர்த்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் சிரப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சந்தீப் வாரியர், வருண் சக்ரவர்த்தி மற்றும் விக்னேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 130 ரன்கள் என்ற இலக்கை நோக்கி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News