ஐபிஎல் 2022: ஹர்திக் சொன்ன அந்த அட்வைஸ்.. இஷான் கிஷன் உருக்கம்..!

Updated: Wed, Apr 06 2022 22:15 IST
'Until you improve, we can't...': MI opener Ishan Kishan recalls how Hardik Pandya assisted him (Image Source: Google)

இந்திய அணியின் இளம் அதிரடி வீரரான கிஷன் கிஷன் இந்திய அணிக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இடதுகை அதிரடி ஆட்டக்காரரான இவர் 2016 ஆம் ஆண்டு முதலே ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் 2020ஆம் ஆண்டு மும்பை அணிக்காக தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னரே புகழ் வெளிச்சத்திற்கு வந்தார்.

தற்போது 23 வயது மட்டுமே நிரம்பிய இடதுகை அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷன் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டு தரப்புக்கும் எதிராக தனது அதிரடியால் ரன்களை விளாச கூடியவர். அவரின் மீது உள்ள நம்பிக்கை காரணமாகவே மெகா ஏலத்தில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடியே 25 லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

இந்த ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் போன வீரராகவும் இதன்மூலம் இஷான் கிஷன் சாதனை படைத்திருந்தார். இப்படி டி20 கிரிக்கெட்டில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆன ஹர்திக் பாண்டியா கூறியதாக தற்போது ஒரு தகவலை இஷான் கிஷன் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நான் மும்பை அணியில் இணைந்த போது நீ இதே போல் செய்து கொண்டிருந்தால் உனக்கு மும்பை அணியின் பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு தரமாட்டார்கள் என்று ஹர்திக் பாண்டியா கூறினார். அப்படி பாண்டியா கூறுவதற்கு காரணம் யாதெனில்,

அப்போது நான் சரியான உடற்பயிற்சி செய்யாமல் இருந்ததும், டயட் உணவுகளை தவிர்த்து என் இஷ்டத்திற்கும் இருந்ததால் பாண்டியா அவ்வாறு கூறியுள்ளார். அதேபோன்று சிறுபிள்ளைத்தனமாக பயிற்சியின் போது செயல்பட்டதாலும், ஐபிஎல் தொடரின் சீரியஸ் தெரியாமல் நான் நடந்து கொண்டது தான் காரணம். 

ஹார்டிக் பண்டியா கூறியதற்கு பின்னர் நான் என்னுடைய கேமில் போகஸ் செலுத்தினேன். அவர் எனக்கு உடற்பயிற்சி எப்படி செய்வது, உடலை எப்படி கட்டுகோப்பாக வைத்திருப்பது என்பது குறித்து பல்வேறு பாடங்களை எடுத்தார். அதேபோன்று க்ருனால் பாண்டியாவும் தனக்கு நிறைய உதவினார். வர்கள் இருவரிடமும் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை