இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!

Updated: Sat, Feb 05 2022 12:52 IST
Image Source: Google

இந்திய அணி நாளை தனது 1000ஆவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இதையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது பாரட்டினை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணி நாளை 1000ஆவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இதில் விளையாடும் முதல் அணியாக இந்தியா இருப்பது அற்புதமான தருணமாக நான் நினைக்கிறேன். முன்னாள் வீரர்கள், இன்னாள் வீரர்கள், நிர்வாகிகள் என எல்லோரும் இதற்கு காரணமாக இருந்தனர். ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டும் இதற்கு பங்களிப்பாக இருந்தன.

கடந்த 2011-ஆம் ஆண்டில் உலக கோப்பையை கையில் ஏந்தியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்ததாகும். 24 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்ற இந்த தருணம் மிகவும் முக்கியமானது.

1983ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது என் வாழ்க்கையில் திருப்பு முனையாகும். இந்த போட்டியை பார்த்ததும்தான் எனக்கு கிரிக்கெட் மீதான உத்வேகம் ஏற்பட்டது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2010ஆம் ஆண்டு குவாலியர் மைதானத்தில் இரட்டை சதம் அடித்தேன். ஒருநாள் சர்வதேச போட்டியில் அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம் இதுவாகும். இதுவே எனது சிறந்த ஆட்டமாகும்.

 

ஏனென்றால் தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சில் மிகவும் வலுவாக இருந்தது. சிறந்த அணிக்கு எதிராகவே முதல் முறையாக இரட்டை சதம் அடித்தேன். அதற்கு பிறகுதான் மற்ற வீரர்கள் இரட்டை சதம் அடித்தனர்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி சிறந்ததாகும். 1000-வது போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தொடரை கைப்பற்ற வீரர்களை வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை