வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 5ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sun, Aug 07 2022 13:19 IST
West Indies vs India, 5th T20I - Cricket Match Prediction, Fantasy 11 Tips & Probable 11 (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ப்ளோரிடாவில் நடைபெறுகிறது.

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீ vs இந்தியா
  •     இடம் - லௌடர் ஹில், ப்ளோரிடா
  •     நேரம் - இரவு 8 மணி

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 4 போட்டிகளில் மூன்றில் வெற்றிபெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது. 

இந்திய அணியின் பேட்டிங்கில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் என நட்சத்திர வீரர்கள் அதிரடியாக விளையாடிவருவது அணிக்கு கூடுதல் உத்வேகமாகவும் அமைந்துள்ளது. அதேசமயம் பந்துவீச்சு தரப்பில் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் ரசிகர்களின் கவணத்தை ஈர்த்துள்ளார்.

இதனால் இன்றைய ஐந்தாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று விண்டீஸை வீழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே தொடரை இழந்துவிட்டதால், இன்றைய போட்டியில் தங்களது ஆறுதல் வெற்றியையாவது தேடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், பூரன், ஹெட்மையர் என எதிரடி பேட்ஸ்மேன்களும், அகில் ஹொசைன், அல்ஸாரி ஜோசப் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் ஆறுதல் வெற்றியைப் பெறும்.

நேருக்கு நேர்

  •     மோதிய போட்டிகள் - 24
  •     வெஸ்ட் இண்டீஸ் - 7
  •     இந்தியா - 16
  •     முடிவில்லை - 1

உத்தேச லெவன் 

வெஸ்ட் இண்டீஸ் - பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன் (கே), ஷிம்ரோன் ஹெட்மியர், டெவோன் தாமஸ், ரோவ்மேன் பவல், டொமினிக் டிரேக்ஸ், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், ஓபேட் மெக்காய்

இந்தியா - ரோஹித் சர்மா (கே), சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த், நிக்கோலஸ் பூரன்
  •      பேட்டர்ஸ் – சூர்யகுமார் யாதவ், கைல் மேயர்ஸ், சஞ்சு சாம்சன், ரோவ்மேன் பவல்,
  •      ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா
  •      பந்துவீச்சாளர்கள் - புவனேஷ்வர் குமார், அகேல் ஹொசைன், அர்ஷ்தீப் சிங்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை