விராட் கோலியிடமிருந்து பாபர் ஆசாம் இதனை கற்க வேண்டும் - டேனிஸ் கனேரியா!

Updated: Wed, Nov 16 2022 22:50 IST
When it comes to being selfless, there is no one like him: Danish Kaneria asks Babar Azam to learn f (Image Source: Google)

டி20 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதிச்சுற்றுக்கே தகுதி பெற வாய்ப்பே இல்லை என்ற கருதப்பட்ட பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து அணியின் வெற்றியின் காரணமாக அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அதுவரை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை கடுமையாக விமர்சித்த அனைவரும் சற்று வாயடைத்து போயிருந்தனர். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாபர் அசாம் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெல்லும் என எதிர்பார்த்த நிலையில், இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் பாகிஸ்தான் அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணி பென்ஸ் ஸ்டோக்ஸின் அபாரமான அதிகாரத்தின் மூலம் பாகிஸ்தான் அணியை 5 வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சிலருக்கு மட்டுமே கிடைக்கும் அரிதான வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கு கிடைத்தும், இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதால் மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இந்த தோல்விக்கு பாபர் அசாம் முழுமையாக பொறுப்பேற்று தன்னுடைய கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டத்தில் அவருக்கு நெருக்கடி நிலவி வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா விராட் கோலியை முன்னுதாரணம் காட்டி பாபர் அசாமை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து டேனிஷ் கனேரியா தெரிவித்ததாவது, “தன்னலமில்லாமல் செயல்படும் ஒரு வீரர் உண்டு என்றால் அது விராட் கோலியை தவிர்த்து வேறு யாரும் கிடையாது, விராட் கோலியின் தலைமையில் உலகக்கோப்பை தொடர் தோல்வியை தழுவிய பொழுது, அவர் குறித்த விமர்சனம் அதிகம் எழுந்ததும் ஆனால் அவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் புதிதாக நியமிக்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு முழு ஆதரவாக இருந்தார். 

விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் என்று ரோஹித் சர்மா நினைத்தாரோ அதன்படியே விராட் கோலி கேட்டு செயல்பட்டார்.ஆனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அப்படி கிடையாது, தன்னுடைய துவக்க இடத்தை விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக செயல்படுகிறார். 

பிபிஎல் தொடரிலும் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடிய பொழுதும் இதேபோன்று பிடிவாதமாக செயல்பட்டார். ஏனென்றால் பாபர் அசாமிர்க்கு மிடிலாடர்களில் பேட்டிங் செய்ய தெரியாது. இவருடைய பிடிவாதம் பாகிஸ்தான் அணிக்கு மிகவும் ஆபத்தாக அமைந்துள்ளது” என்று பாபர் அசாமை கடுமையாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை