WI vs AUS: பூரன், ஹோல்டர் அதிரடியில் தொடரை சமன் செய்த விண்டீஸ்!

Updated: Sun, Jul 25 2021 09:49 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஒத்திவைக்கப்பட்டிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றிருந்த ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி காட்ரெல், அல்ஸாரி ஜோசப், அகில் ஹொசைன் ஆகியோரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இதனால் அந்த அணி 47.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக வெஸ் அகர் 41 ரன்களையும், மேத்யூ வேட், ஆடம் ஸாம்பா தலா 36 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப், அகில் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஆரம்பத்திலேயே தடுமாறியது. இருப்பினும்  நிக்கோலஸ் பூரன் - ஜேசன் ஹோல்டர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இதன் மூலம் 38 ஓவர்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 59 ரன்களை சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவிய நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி சமன்செய்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை