இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நவம்பர் 6ஆம் தேதி குயின்ஸ்லாந்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகாக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றனர். 

Advertisement

டிராவிஸ் ஹெட்டுக்கு பதிலாக கிளென் மேக்ஸ்வெல்

Advertisement

இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இருந்து டிராவிஸ் ஹெட் நீக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆஷஸ் டெஸ்ட்டுக்கு தயாராகும் வகையில் அவர் கடைசி இரண்டு டி20 போட்டிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 124 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் 2,833 ரன்களையும், 49 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

தொடக்க வீரர்கள் யார்?

டிராவிஸ் ஹெட் இல்லாத நிலையில், இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக ஆல்ரவுண்டர் மேத்யூ ஷார்ட் மிட்செல் மார்ஷுடன் தொடக்க வீரராக களமிறங்கலாம். 29 வயதான அவர் ஆஸ்திரேலியாவுக்காக 19 டி20 போட்டிகளில் விளையாடி, 22.31 சராசரியாக 357 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் டி20 கிரிக்கெட்டில் அவர் 138 டி20 போட்டிகளில் 3,406 ரன்கள் குவித்து 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் உத்தேச லெவன்: மேத்யூ ஷார்ட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சேவியர் பார்ட்லெட், பென் துவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னெமன்.

Also Read: LIVE Cricket Score
Advertisement

ஆஸ்திரேலியா டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட் (முதல் மூன்று போட்டிகள் மட்டும்), சேவியர் பார்ட்லெட், மஹ்லி பியர்ட்மேன், க்ளென் மேக்ஸ்வெல் (கடைசி மூன்று போட்டிகள் மட்டும்), டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ் (கடைசி இரண்டு போட்டிகள் மட்டும்), நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட் (முதல் இரண்டு போட்டிகள் மட்டும்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குஹ்னெமன், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News