WI vs NZ, 1st T20I: விண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது நியூசிலாந்து!

Updated: Thu, Aug 11 2022 11:22 IST
WI vs NZ, 1st T20I: Odean Smith's all-round show goes in vain as New Zealand defeat West Indies by 1 (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஜமைக்காவில் நேற்று நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ்வென்ர டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் டெவன் கான்வே 43 (29), கேப்டன் கேன் வில்லியம்சன் 47 (33) ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார்கள். 

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மார்ட்டின் கப்தில் 16 (17), கிளென் பிலிப்ஸ் 17 (11) போன்றவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இறுதியில் ஜிம்மி நீஷம் 16 பந்துகளில் 33 ரன்களை அடித்ததால், நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 185/5 ரன்களை குவித்து அசத்தியது.

அதன்பின் கடின இலக்கை துரத்திக் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் சமாரா ப்ரூக்ஸ் நிதானமாக விளையாடி 42 ரன்களை சேர்த்தார். மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கைல் மேய்ர்ஸ் 1, நிகோலஸ் பூரன் 15, டிவோன் தாமஸ் 1 , ஹெட்மையர் 2 போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.

இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 15.4 ஓவர்கள் முடிவில் 114/7 என தடுமாறிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ஹோல்டர் 25 , ரௌமேன் பௌல் 18 ஓரளவுக்கு ரன்களை சேர்த்த நிலையில் அடுத்து ரொமாரியோ செய்பர்ட், ஓடியன் ஸ்மித் இருவரும் காட்டடி அடிக்க துவங்கினார்கள். இதனால், 18, 19ஆவது வெஸ்ட் இண்டீஸ் அணி ஓவர்களில் 35 ரன்கள் சேர்ந்தது.

இதனால் கடைசி ஓவருக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. டிம் சௌதீ வீசிய கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் சிங்கில்கள் சென்ற நிலையில் மூன்றாவது பந்தில் செய்பர்ட் சிக்ஸர் அடித்து அசத்தினார். தொடர்ந்து இரண்டு ரன்கள் சென்ற நிலையில் 5ஆவது பந்தில் செய்பர்ட் டீம் மிட் விக்கெட் திசையில் சிக்ஸருக்கு பந்தை பறக்கவிட முயற்சித்தார்.

அந்த சமயத்தில் ஜேம்ஸ் நீஷம் பறவையைப் போல பறந்து சிக்ஸருக்கு செல்லவிருந்த பந்தை தட்டிவிட்டார். இதனால், ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசிப் பந்திலும் ஒருரன் மட்டுமே எடுக்க முடிந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணி 172/7 ரன்களை மட்டும் சேர்த்து.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் விண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் 1-0 என்ற கணக்கில் டி20 தொடரிலும் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை