மகளிர் உலகக்கோப்பை 2022: ஹர்மன், மிதாலி அதிரடி; ஆஸிக்கு 278 இலக்கு!
நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த யஸ்திகா பாட்டியா - கேப்டன் மிதாலி ராஜ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தனர்.
இதையடுத்து 59 ரன்களில் பாட்டியா ஆட்டமிழக்க, 68 ரன்களுடன் கேப்டன் மிதாலி ராஜும் பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி ஹர்மன்ப்ரீத் கவுருடன் ஜோடி சேர்ந்த பூஜா வஸ்த்ரேகர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ஹர்மன்ப்ரித் அரைதம் கடக்க, மறுமுனையில் பூஜா வஸ்த்ரேகர் பவுண்டரி மழை பொழிந்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 இக்கெட் இழப்பிற்கு 277 ரன்களைக் குவித்தது.
இந்திய அணி தரப்பில் ஹர்மன்ப்ரீத் கவுர் 57 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் டிரேஸீ பிரவுன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.