Harmanpreet kaur
Asian Games 2023: இலங்கையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது இந்தியா!
சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் முன்னேறின. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்க ஷஃபாலி வர்மா 9 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.