நீங்க வாய்ப்பு தரலைனா என்ன...நான் அங்க போய் விளையாடுறேன் - சஹால் எடுத்த அதிரடி முடிவு!

Updated: Wed, Sep 06 2023 22:12 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இவர் இதுவரை 72 ஒருநாள் மற்றும் 80 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 27.13 சராசரியில் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது தவிர, சாஹல் சர்வதேச டி20 போட்டிகளில் 25.09 சராசரியில் 96 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் தான், 2023 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த செய்தியானது வெளியானபோது இந்திய ரசிகர்களும், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் சாஹல் ஏன் அணியில் தேர்வு செய்யவில்லை கேள்வி எழுப்பி வந்தனர். இந்தநிலையில், சாஹல் தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்துள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

இதன்மூலம்,யுஸ்வேந்திர சாஹல்  இங்கிலாந்தின் கவுண்டி அணிகளில் ஒன்றான கென்ட்  அணிக்காக விளையாடலாம் என்றும், இது கவுண்டி கிரிக்கெட்டில் சாஹலின் அறிமுகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த நேற்று உலகக் கோப்பைக்கான இந்திய அணி தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படாததால் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட சாஹல் முடிவு செய்துள்ளார். அவர் பிசிசிஐ-யிடமிருந்து என்ஓசி அதாவது தடையில்லாச் சான்றிதழையும் பெற்றுள்ளார். இது குறித்து கென்ட் கவுண்டி கிளப் கிரிக்கெட் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாஹல் அவர்களுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பிசிசிஐ என்ஓசி வழங்கியுள்ளது. இந்திய அணிக்கு எப்போது தேவையோ, அப்போதே இந்திய அணியில் இணைவார்.

 

சாஹலுக்கு இப்போது இந்திய அணியில் மிகக் குறைவான வாய்ப்புகளே வழங்கப்படுகின்றன. தற்போது கூட ஆசிய கோப்பை அணியில் சாஹலுக்கு இடம் பெறவில்லை. பின்னர் அவர் உலகக் கோப்பை அணியில் இருந்தும் ஒதுக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டில், சாஹல் இதுவரை 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார், அதில் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், இவர் முக்கியமாக ஒருநாள் அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி : ஷுப்மன் கில், ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா , குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை