ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில், மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் கஜகஜஸ்தானின் அன்னா டேனிலினா ஜோடி, ஹங்கேரியின் டால்மா கால்பி மற்றும் அமெரிக்காவின் பெர்னடா பெரா ஜோடியை எதிர்கொண்டது.

Advertisement

இதில், ஒரு மணி நேரம் 15 நிமிடம் வரையில் நடந்த போட்டியில் சானியா மிர்சா ஜோடி 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 2ஆவது சுற்றுப் போட்டியில் சானியா மிர்சா ஜோடி உக்ரைனினி அன்ஹெலினா கலினினா மற்றும் பெல்ஜியத்தின் அலிசன் வான் உட்வானிக் ஜோடியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

Advertisement

வரும் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதியிலிருந்து 19 ஆம் தேதி வரையில் நடக்கும் துபாய் ஓபன் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் மூலமாக சர்வதேச டென்னிஸ் போட்டியிலிருந்து சானியா மிர்சா ஓய்வு பெறுகிறார். தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தான் அவரது கடைசி கிராண்ட்ஸ்லாம் ஆகும். 

சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் 6 முறை டைட்டில் கைப்பற்றியிருக்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் சில்வர் பதக்கம் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News