×
    Advertisement
    Advertisement

    ஐபிஎல் ஏலம்

    ஐபிஎல் 2023: ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23, 2022 அன்று நடைபெறவுள்ள நிலையில், ஐபிஎல் உரிமையாளர்கள் கொச்சியில் மினி ஏலத்தை நடத்தத் தயாராகி வருகின்றனர். மொத்தம் 405 வீரர்கள் இந்த ஏலத்தில் கலந்துகொள்ள தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 87 வீரர்களை 10 அணிகளின் உரிமையார்கள் தேர்வுசெய்யவுள்ளனர். 

    பிசிசிஐ ஊடக அறிக்கையின்படி, 405 வீரர்களில் 273 பேர் இந்தியர்கள் மற்றும் 132 பேர் வெளிநாட்டு வீரர்கள். அதேசமயம் அசோசியேட் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 வீரர்களும் இப்பட்டியலில் உள்ளனர். 4 அசோசியேட் நாட்டு வீரர்களைத் தவிர 282 சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ளது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக 87 இடங்களை நிரப்ப முடியும், இதில் 30 வெளிநாட்டு வீரர்களுக்கான வரம்பாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    வீடு Special Live Cricket Video Sports