ஆடவா் ஒற்றையரில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வென்றார். கடந்த மார்ச் 2021ஆம் ஆண்டில் நம்பர் 1 வீரராக 310 வாரங்களுக்கு நீடித்த ஃபெடரரின் சாதனையை முறியடித்தார் ஜோகோவிச். 

Advertisement

தற்போது, ஏடிபி தரவரிசையில் முதல் இடத்தில் 377 வாரங்களாக இருந்த ஸ்டெஃபானி கிராஃபின் சாதனையையும் முறியடித்துள்ளார். இதன்மூலம் ஆடவர், மகளிர் என இரு தரப்பிலும் அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்த வீரர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார்\. 

Advertisement

முன்னதாக கடந்த 2011ஆம் ஆண்டில் 24 வயதில் முதல்முறையாக நம்பர் 1 வீரராக ஆனார் ஜோகோவிச். ஜூலை 7, 2014 முதல் நவம்பர் 6, 2016 வரை தொடர்ச்சியாக நெ1 வீரராக இருந்தார். தற்போது மேலும் மற்றொரு சாதனையைப் படைத்து தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் அதிக வாரங்களுக்கு நம்பர் 1 இடத்தில் இருந்த வீரர்கள்

  • ஜோகோவிச் - 378 வாரங்கள்
  • கிராஃப் - 377 வாரங்கள்
  • நவரத்திலோவா - 332 வாரங்கள்
  • செரீனா வில்லியம்ஸ் - 319 வாரங்கள்
  • ஃபெடரர் - 310 வாரங்கள் 
     

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News