இணையவழி கல்வி கற்பிக்கும் நிறுவனமான பைஜுஸ் 2011இல் தொடங்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த பைஜு ரவீந்திரனால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி, பைஜுஸ் நிறுவனத்தின் சர்வதேச அளவிலான விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அனைவருக்குமான கல்வி என்கிற திட்டத்தின் தூதராக மெஸ்ஸி செயல்படுவார் என பைஜுஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கத்தாரில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியின் விளம்பரதாரராகவும் பைஜுஸ் நிறுவனம் செயல்படவுள்ளது. 

Advertisement

பாரிஸ் செயின்ட் ஜெர்மெயின் அணி மற்றும் அர்ஜென்டினா கால்பந்து அணிக்காக விளையாடிவரும் மெஸ்ஸி பைஜூஸ் ஒப்பந்த்தில் கையொப்பமிட்டு சமச்சீர் கல்விக்கான காரணத்தை ஊக்கப்படுத்த உள்ளார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  கல்வி அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், சமமானதாகவும் மற்றும் குறைந்த விலையில் வழங்குவதற்கு சர்வதேச அளவில் பைஜூஸ் நிறுவனம், உலகின் பிரபலமான கால்பந்து வீரரான மெஸ்ஸியுடன் இணைந்து கால் பதிக்கிறது.

Advertisement

இதுகுறித்து பேசிய லியோனல் மெஸ்ஸி கூறுகையில் “ கற்றலை அனைவரும் காதலிக்க முடியும் என்ற கருத்தை வலியுறுத்தும் எனது நோக்கத்துடன் பைஜூஸின் நோக்கமும் ஒத்திருக்கிறது என்பாதால், பைஜூஸுடன் நான் ஒப்பந்தம் செய்தேன். உயர்தர கல்வி வாழ்க்கையை மாற்றுகிறது, உலகளவில் லட்சக்கணக்கான  மாணவர்களின் வாழ்க்கைப் பாதைகளை பைஜூஸ் மாற்றியுள்ளது. இளம் கற்கும் மாணவர்களை முதலிடத்தை அடைய ஊக்குவிப்பேன் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News