ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில்  நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 5ஆம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் சபலெங்கா, 22ஆம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவை எதிர்த்து விளையாடினார். 

Advertisement

இதில் முதல் செட்டை சபலெங்கா 4-6 என இழந்தார். எனினும்அடுத்த இரு செட்களையும் துடிப்புடன் விளையாடி 6-3, 6-4 என கைப்பற்றினார். முடிவில் 2 மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டத்தில் சபலெங்கா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 

Advertisement

கிராண்ட் ஸ்லாம் தொடரில் சபலெங்கா சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். மேலும் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் 2ஆவது பெல்லாரஸ் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார் சபலெங்கா. இதற்கு முன்னர் அந்நாட்டைச் சேர்ந்த விக்டோரியா அசரங்கா 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் பட்டம் வென்றிருந்தார்.

ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம்வென்றுள்ள சபலெங்கா, சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை பெற உள்ளார். அதேவேளையில் ரைபகினா முதல் 10 இடங்களுக்குள் முன்னேற்றம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News