வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் நடப்பாண்டு சீசன் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement

இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் உலகின் நான்காம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ்வை எதிர்கொண்டார்.

Advertisement

இப்போட்டியின் ஆரம்பம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் முதல் செட்டை 6-4 என்ற கணகிலும், இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கிலும் கைப்பற்றி டிமிட்ரோவ்விற்கு அதிர்ச்சியளித்தார்.

இதன்மூலம் டேனியல் மெத்வதேவ் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கிரிகோர் டிமிட்ரோவ்வை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். 

அதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கனடாவின் நட்சத்திர வீரர் டெனிஸ் ஷபோவலோவ், குரோசியாவின் பொர்னோ கொரிக்கை எதிர்கொண்டார். 

மிகவும் பரபரப்பு நிறைந்த இப்போட்டியின் முதல் செட்டை இருவீரர்களும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். ஆனால் இறுதியில் ஷபோவலோவ் 7-6 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி அசத்தினார்.

Advertisement

அதன்பின் நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும், அபாரமாக செயல்பட்ட ஷபோவலோவ், எதிரணி வீரரை புள்ளிகளை எடுக்க விடாமல் 6-0 என்ற கணக்கில் வென்று அசத்தினார்.

இதன்மூலம் டெனிஸ் ஷபோவலோஃப் 7-6, 6-0 என்ற நேர் செட் கணக்கில் பொர்னோ கொரிக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

இதன்மூலம் டெனிஸ் ஷபோவலோஃப் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் டேனியல் மெத்வதேவ்வை எதிர்கொள்ளவுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News