சஞ்சு சாம்சனுக்கு நடுவர்கள் தவறான முடிவை வழங்கியுள்ளனர் - நவ்ஜோத் சிங் சித்து!
சஞ்சு சாம்சனுக்கு மூன்றாம் நடுவர் வழங்கிய முடிவின் காரணமாக நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது
ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 56ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக அபிஷேக் போரல் 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், பட்லர் 19 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தார். அதன்பின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அவருக்கு துணையாக ரியான் பராக் 27 ரன்களிலு, ஷுபம் தூபே 25 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Trending
இருப்பினும் தொடர்ந்து தனி ஆளாக போராடிய சஞ்சு சாம்சன் 86 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ரோவ்மன் பாவெல், டோனவன் ஃபெரீரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பானது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதிலும் குறிப்பாக சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு நடுவர்கள் தவறான முடிவை வழங்கியுள்ளனர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையளருமான நவ்ஜோத் சிங் சித்து குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சஞ்சு சாம்சனுக்கு மூன்றாம் நடுவர் வழங்கிய முடிவின் காரணமாக நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது. அதிலும் குறிப்பாக கேட்ச் பிடிக்கும் போது ஃபீல்டர் பவுண்டரி லைனை 2 முறை தொட்டுவிட்டார்.
Navjot Singh Sidhu said, "Sanju Samson was clearly not out. Fielder's feet touch the boundary twice while taking the catch."#SanjuSamson #SRHvsLSG
— Giriraj Dhaker (@cricket24_) May 8, 2024
pic.twitter.com/udvhll1woo
ஆனால் மூன்றாம் நடுவரோ சில வினாடிகள் மட்டுமே பார்த்துவிட்டு முடிவை எடுத்துவிட்டார். பல கோணங்களில் பீல்டரின் கால் பவுண்டரி ரோப்பை தொட்டதா இல்லையா என்பதை தெளிவாக பார்த்திருக்க வேண்டும். மிகப்பெரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் தவறு செய்யும் போது, அதனை ஏன் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now