
அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அண்ணி 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
மேலும் கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது. அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இம்முறையாவது வெற்றியைப் பதிவுசெய்வதுடன் மீண்டும் இத்தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைப்பட்ட நட்சத்திர வீரர் சட்டேஷ்வர் புஜாரா இன்றி இத்தொடரி இந்திய அணி விளையாட இருக்கிறது. ஏனெனில் கடந்த் இரண்டு முறையிலும் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை வென்றதில் புஜாராவிற்கு தனி இடம் உள்ளது. ஆனால் சமீப காலங்களில் வயது மூப்பு மற்றும் மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் சட்டேஷ்வர் புஜாரா ஓரங்கட்டப்பட்டார்.